வெள்ளத்திற்கு பிறகு சீரான நீர்வரத்து; குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்

குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
வெள்ளத்திற்கு பிறகு சீரான நீர்வரத்து; குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 12ம் தேதிபெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவிக்கரைகள் சேதமடைந்தன. மேலும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து ஐந்தருவி, புலியருவியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து முற்றிலும் சீரான நிலையில், குற்றால அருவியில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.

அதோடு, குற்றாலத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம், காட்டாற்று வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், பழைய குற்றால அருவியில் மட்டும் 14-வது நாளாக குளிப்பதற்கு தடை தொடர்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com