கோவில் உண்டியல், கலசங்கள் திருட்டு

பெரம்பலூர் அருகே கோவில் உண்டியல், கலசங்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் உண்டியல், கலசங்கள் திருட்டு
Published on

பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தில் ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான பஞ்சமாயி அம்மன் கோவில் காட்டுப் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியல் மற்றும் வெங்கல மணிகள், கலசங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.7 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com