உள்ளாடைகள் திருட்டு... ஆபாச பேச்சு... கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி

மாணவியிடம் ஆபாசமாக பேசி தொழிலாளி தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
உள்ளாடைகள் திருட்டு... ஆபாச பேச்சு... கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி
Published on

கோவை,

கோவையை சேர்ந்தவர் முருகன் (வயது 54), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது. இந்த நிலையில் அவருக்கு எம்.எஸ்சி. படித்து வரும் 24 வயதான கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நன்றாக பேசி வந்த முருகன், நாட்கள் செல்லச் செல்ல மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

எனவே அந்த மாணவி, முருகனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் மாணவி வீட்டை விட்டு வெளியே வரும் போது முருகன் ஆபாசமாக பேசுவது, சைகை காட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இதை அந்த மாணவி கண்டித்து உள்ளார். ஆனாலும் அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

இது பற்றி அந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முருகன், அடிக்கடி குடித்து விட்டு அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

மேலும் அவர், மாணவியின் உள்ளாடைகளை திருடி துண்டு துண்டாக வெட்டி வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் முருகனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com