மறைமலைநகரில் திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது

மறைமலைநகரில் திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மறைமலைநகரில் திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சிங்காரவேலன் தெரு டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com