ஊரப்பாக்கத்தில் திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது

ஊரப்பாக்கத்தில் திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஊரப்பாக்கத்தில் திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த வேனு (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com