மின்வெட்டுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்ரீகாந்தி ராமதாஸ் வலியுறுத்தல்

கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், மின்வெட்டுகள் காரணமாக குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்தி ராமதாஸ்
Published on

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில், மின்வெட்டுகள் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், மின்வெட்டுகள் காரணமாக குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, தமிழக அரசு மற்றும் மின்துறை நிர்வாகம் கோடைக்கால மின்தேவையை முன்கூட்டியே கணித்து, மின்வெட்டுகள் ஏற்படாத வகையில் சிறப்பு செயல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோக அமைப்புகளை மேலும் வலுப்படுத்தி, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், புதிய அரசு, மின்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com