நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடலை தமிழகம் கொண்டு வர தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

கேரளத்தில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணின் உடல் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தாயை இழந்த அவரது பிள்ளைகள் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாததால் இரட்டை வேதனையில் தவிக்கின்றனர்.

கோட்டயம் அரசு மருத்துவமனையில் பத்மா உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவு முறையை உறுதி செய்ய அவரது மகன்களிடம் மரபணு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பிள்ளைகளிடம் உடல் ஒப்படைக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை தெரிவிக்க கேரள அரசு மறுக்கிறது.

இறந்த முன்னோரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து கண்ணியமாக வழியனுப்பி வைப்பது தமிழர்களின் வழக்கம். அதை நிறைவேற்ற உதவும் வகையில் பத்மாவின் உடலை அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் எர்ரபட்டிக்கு கொண்டு வர தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com