அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை; ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் அரசு விளக்கம் அளித்துள்ளது.
அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை; ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
Published on

சென்னை அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில், கிருஷ்ணகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அடையாறு ஆற்றின் கரைப்பகுதி உள்ள ஆக்கிரமிப்பால், மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், கூவம் மறுசீரமைப்பு அறக்கட்டளை மூலம் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோர்ட்டு தடை உத்தரவு இல்லாத இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்க்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com