விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு

விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னை
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "நீண்ட காலமாக இந்தப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது டெண்டர் விடப்பட்டு ஒரு நிறுவனம் அதை எடுத்துள்ளது. எனவே இந்த சாலைப்பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story






