வெளிநாடுகளுக்கு ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை - பால்வளத்துறை தகவல்

மொரீசியஸ், மலேசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை - பால்வளத்துறை தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாடு பால்வளத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் எளிதில் கிடைக்காத இடங்களுக்கு அதிகமான தனி உரிமை கிளைதாரர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், இணையம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகமான எண்ணிக்கையில் நிறுவன, மொத்த விற்பனையாளர்களை நியமிப்பதன் மூலம் ஆவின் பொருட்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவின் நிறுவனம் மின் வணிகத்தில் தனது பங்களிப்பை அதிகமான அளவில் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஆவின் பொருட்கள் சிங்கப்பூர், ஹாங்காங், குவைத், கத்தார், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்றும் மேலும் மொரீசியஸ், மலேசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பால்வளத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com