பட்டியலின, பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தொழில்நுட்ப பணிகளிலும் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பட்டியலின, பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 2024-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகள் தேர்வு மூலம் பட்டியலின, பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப 50 தேர்வர்களை தேர்வு செய்துள்ளது. மேலும், 2024-ம் ஆண்டு, குரூப்-1 தேர்வு மூலம் 12 பின்னடைவு காலிப்பணியிடங்கள், குரூப்-2, 2ஏ தேர்வு மூலம் 135 பின்னடைவு காலிப்பணியிடங்கள், குரூப்-4 தேர்வு மூலம் 434 பின்னடைவு காலிப்பணியிடங்கள் ஆக மொத்தம் 581 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், தொழில்நுட்ப பணிகளிலும் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com