ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: திட்டமிட்டபடி 22-ந் தேதி ஆய்வு செய்வோம்

திட்டமிட்டபடி 22-ந் தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று ஸ்டெர்லைட் குறித்து ஆய்வு செய்வோம் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: திட்டமிட்டபடி 22-ந் தேதி ஆய்வு செய்வோம்
Published on

பெங்களூரு,

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் சுரேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் அதாவது நாங்கள் வருகிற 22-ந் தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எங்களுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், 22-ந் தேதி நேரில் ஆய்வுக்கு வருவதை தள்ளி வைக்குமாறு கூறப்பட்டு உள்ளது.

ஆனால் அதை நாங்கள் ஏற்கமாட்டோம். நாங்கள் திட்டமிட்டபடி 22-ந் தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்வோம். கோர்ட்டு தடை விதித்தால் மட்டுமே நாங்கள் அந்த ஆய்வை நிறுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com