லாரிகளை சிறைபிடித்த விவசாயிகளால் பரபரப்பு

மண் சாலை சேதமடைந்ததாக கூறி லாரிகளை சிறைபிடித்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரிகளை சிறைபிடித்த விவசாயிகளால் பரபரப்பு
Published on

நெகமம்,

நெகமம் அடுத்த வடசித்தூர் பனப்பட்டி செல்லும் சாலையில் இருந்து வெள்ளே கவுண்டன்புதூருக்கு மண் சாலை செல்கிறது. இந்த வழியாக விவசாயிகள் சென்று வருகின்றனர். சமீபத்தில் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் சாலையை சரிசெய்து பயன்படுத்தினர்.

தற்போது தனியார் நிறுவனம் திண்டுக்கல்-பொள்ளாச்சி சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக தோட்டத்து மண்ணை விலைக்கு வாங்கி லாரிகள் மூலம் மண் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகள் மண் எடுத்து செல்வதால் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

அதன் காரணமாக விவசாயிகள் சிரமப்பட்டனர். இதனால் விவசாயிகள் மண் சாலை சேதமடைவதாக கூறி லாரிகளை சிறைபிடித்தனர். அப்போது டிரைவர்களிடம் மண்ணை கொட்டி விட்டு செல்லும் படி கூறினர். லாரிகளில் இருந்த மண் கொட்டி செல்லப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com