அழகிய வேலைப்பாடுகளுடன் கல் தூண்கள் கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருப்பணிகளின் போது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல் தூண்கள் கண்டெடுக்கப்பட்டன.
அழகிய வேலைப்பாடுகளுடன் கல் தூண்கள் கண்டெடுப்பு
Published on

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருப்பணிகளின் போது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல் தூண்கள் கண்டெடுக்கப்பட்டன.

சொக்கநாதர் கோவில்

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் பழமை வாய்ந்த சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான திருப்பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலில் நவக்கிரக சன்னதிக்கு அருகே மேடை போன்ற ஒரு அமைப்பு உள்ளது.தற்போது அந்த மேடையை அகற்றிவிட்டு அங்கு புதிதாக ஊஞ்சல் மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்பாது மேடையை இடித்த போது அதன் உள்ளே பழமையான 10 கல்தூண்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஊஞ்சல் மண்டபம்

இதுகுறித்து திருப்பணி குழுவினர் கூறுகையில்,

300 ஆண்டுகளுக்கு முந்தைய கல் தூண்கள் இந்த மேடைப்பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது செவி வழி செய்தியாக தெரியும். தற்போது மேடையை இடித்த போது அந்த கல்தூண்கள் அப்படியே உள்ளே இருந்தது எங்களை ஆச்சரியப்படுத்தியது.

இந்த கல் தூண்களை பயன்படுத்தி இங்கு ஊஞ்சல் மண்டபம் கட்டப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com