பெருங்களத்தூர்-தாம்பரம் இடையே மின்சார ரெயில் மீது கல்வீச்சு; பயணிக்கு தலையில் காயம்

ரெயில்கள் மீது கல் வீசும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெருங்களத்தூர்-தாம்பரம் இடையே மின்சார ரெயில் மீது கல்வீச்சு; பயணிக்கு தலையில் காயம்
Published on

சென்னை,

சென்னையில் புறநகர் மற்றும் வந்தே பாரத் ரெயில்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் அவ்வபோது அரங்கேறி வருகின்றன இந்த சம்பவத்தால் பயணிகள் மற்றும் ரெல்வே சொத்துக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக வியாசர்பாடி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் மர்ம நபர்கள், சிறுவர்கள் தண்டவாளக் பகுதியில் உள்ள கற்கள் மற்றும் பாட்டில்களை எடுத்து ரெயில் செல்லும் பகுதியை நோக்கி வீசுகின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த ஆபத்தான செயலில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே பாதுகாப்புப் படை எச்சரித்து வருகிறது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றன.

இந்தநிலையில், தாம்பரம் அருகே பெருங்களத்தூர்-தாம்பரம் இடையே மின்சார ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பார்த்திப கண்ணன்(26) என்கிற பயணியின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கு தலையில் தையல் போடப்பட்டது. இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com