அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் பணி தடுத்து நிறுத்தம்

நாட்டறம்பள்ளி அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.
அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் பணி தடுத்து நிறுத்தம்
Published on

நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மணாங்கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட அக்ரகாரம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்டுவதற்காக கட்டுமான பொருட்களை கொண்டு வந்து இறக்கி உள்ளதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அக்ராகரம் பகுதியை சேர்ந்த ஒருவர் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கில் 10 சென்ட் அளவில் ஆக்கிரமிப்பு செய்து புதிய வீடு கட்டுவதற்காக கட்டுமான பொருட்களை இறக்கியிருந்தது தெரிய வந்தது. அந்த பொருட்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி இடத்தை மீட்டனர்.

அப்போது துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com