கரையை கடக்கத் துவங்கியது 'மாண்டஸ்' புயல்...!

மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கி உள்ளது.
கரையை கடக்கத் துவங்கியது 'மாண்டஸ்' புயல்...!
Published on

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

தற்போது மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், சென்னை அருகே 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காட்டுபாக்கம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் தரைக்காற்று 60 கி.மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com