வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

கடலூர் முதுநகர், 

அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்நிலை உருவானது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது மணிக்கு சுமார் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு மோகா என பெயரிடப்படும் என தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com