தாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் - பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி தாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் - பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
Published on

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று மாலை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் மாலிக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது:-

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களுடைய பகுதி இயற்கை சார்ந்த பகுதி. ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களும், ஆயிரம் ஏக்கர் குடிநீர் பகுதியும் கொண்ட பகுதி. இது போன்ற பகுதியை அழித்துவிட்டு எங்களுக்கு விமான நிலையம் அமைப்பது முக்கியமில்லை என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அந்த கிராம மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com