எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

ஆரணியில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
Published on

ஆரணி

ஆரணியில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி பழைய பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சபீர் பாட்சா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் எம்.தஸ்லீமா, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் நாகராசன், தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு மண்டல துணை செயலாளர் பழனி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற அமைப்பின் மாநிலச் செயலாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com