

உக்கடம்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ராமநவமி பெயரில் முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் சொத்துக்களை எரித்தும் சேதமாக்கியும், கர்நாடகாவில் பசுவின் பெயரால் இத்ரீஸ் பாஷாவை கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும் கோவை உக்கடத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய மாவட்டம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் முகமது இக்பால் தலைமை தாங்கினார். துணைதலைவர் வி.எம்.அப்துல் ரஹிம் வரவேற்றார்.
இதில் மாவட்ட தலைவர் முஸ்தபா, ஏ.ஏ.அப்துல்காதர், வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல்கரீம், மாவட்ட தலைவர் ஹசன், செயலாளர் சானவாஸ் பாதுஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.