எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளர் காதர் முகைதீன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் முகமது உமர் கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் சுந்தரி மைந்தன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் பாத்திமா பாபு, தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அலி அக்பர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஹசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com