சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை தி. நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
Published on

சென்னை,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. சந்திக்க தயாராகி வருகிறது. இதனையொட்டி கட்சிக்கு புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே, கட்சியின் சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டம், தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்த கமலாலயத்தில் இன்று தொடங்கி உள்ளது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்கிறார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.

மாநில தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களின் தமிழக வருகை மற்றும் சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள், சட்டசபை தேர்தல் பற்றி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணி ஆற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com