தெருநாய்கள் தொல்லையை ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த வேண்டும் - திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


தெருநாய்கள் தொல்லையை ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த வேண்டும் - திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 April 2025 7:31 PM (Updated: 17 April 2025 11:15 PM)
t-max-icont-min-icon

மக்கள் தொகையை விட நாய்கள் அதிகம் உள்ளதாக திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.

மதுரை

திருமங்கலம் நகராட்சியில் நகர்மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற குழு தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆதவன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் அசோக்குமார், பொறியாளர் ரத்தினவேலு உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 2-வது வார்டு பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை. போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிலையில் கவுன்சிலர் சின்னச்சாமி கூறுகையில், திருமங்கலம் நகராட்சியில் குறை கூறி மனு கொடுத்தால், இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து துணை தலைவர் ஆதவன், தெருநாய்களை ஒரு வாரத்துக்குள் பிடிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். மக்கள் தொகையை விட நாய்கள் அதிகம் உள்ளதாக திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியாளர் ரத்தினவேலு தெரிவித்தார்.

1 More update

Next Story