புள்ளிமானை கடித்து கொன்ற தெருநாய்கள்

புள்ளிமானை தெருநாய்கள் கடித்து கொன்றன.
புள்ளிமானை கடித்து கொன்ற தெருநாய்கள்
Published on

தா.பேட்டை:

தா.பேட்டை அருகே உள்ள நீலியாம்பட்டி கிராம விவசாய பகுதிக்கு தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடி வனப்பகுதியில் இருந்து சுமார் 3 வயதுள்ள புள்ளிமான் ஒன்று வழி தவறி தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்போது தெருவில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் திடீரென அந்த மானை துரத்தி சென்று கடித்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை அங்கிருந்து துரத்திவிட்டு காயமடைந்த மானை மீட்டு தும்பலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த மான் பரிதாபமாக இறந்தது. பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த மானை தும்பலம் வனப்பகுதிக்கு எடுத்துச்சென்று புதைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com