தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு; அரசின் டெண்டரை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு


தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு; அரசின் டெண்டரை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
x

விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு விதிகளை எதிர்த்து தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை,

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தும் வகையில் கோரப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு விதிகளை எதிர்த்து தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சட்டத்திற்கு விரோதமாக அரசு டெண்டர் கோரியுள்ளது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனு தொடர்பாக வரும் ஜூன் 20-ந்தேதிக்குள் மத்திய, மாநில விலங்குகள் நல வாரியம் மற்றும் கால்நடை துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story