விராலிமலையில் தெருமுனை கூட்டம்

விராலிமலையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
விராலிமலையில் தெருமுனை கூட்டம்
Published on

விராலிமலை சோதனைச்சாவடியில் தமிழ்நாடு உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுபாஸ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். இதில் விராலிமலை அருகே கொடும்பாளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவசர சிகிச்சை மையத்தை மக்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றும் முடிவை கைவிட்டு தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், ராணியார் மருத்துவமனை, காவேரி நகர், வாராப்பூர், கிள்ளுக்கோட்டை, கந்தர்வகோட்டை, மரமடக்கி, ராசநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு கழிவறையுடன் கூடிய பணியிட வசதியை செய்து கொடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பகுதி நேரமாக இயங்கி வரும் பரம்பூர், கிள்ளுக்கோட்டை, ராசநாயக்கன்பட்டியில் உள்ள ஆம்புலன்ஸ்களை 24 மணிநேரமும் இயக்கிட உடனடி நடவடிக்கை வேண்டும். மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து ஆகியவற்றிற்காக விடுப்பு எடுத்த தொழிலாளர்களின் சம்பளத்தை பிடிப்பது. சம்பள உயர்வை தர மறுப்பது போன்ற செயல்களை கைவிட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் பிடித்தம் செய்த சம்பளம் மற்றும் சம்பள உயர்வை தனியார் நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் விராலிமலை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நாகராஜ் உள்பட தமிழ்நாடு உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com