புதுக்கோட்டை: வெறிநாய் கடித்து சிறுமி உள்பட 6 பேர் காயம்


புதுக்கோட்டை: வெறிநாய் கடித்து சிறுமி உள்பட 6 பேர் காயம்
x

தமிழகத்தில் வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதுக்கோட்டை

தமிழகத்தில் வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நேற்று வெறிநாய் கடித்து ஒரு சிறுமி, 3 பெண்கள், 2 முதியவர்கள் என 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story