அரங்கநாதர் கருட வாகனத்தில் வீதிஉலா

திருவரங்கம் அரங்கநாதர் கருட வாகனத்தில் வீதிஉலா வந்தார்.
அரங்கநாதர் கருட வாகனத்தில் வீதிஉலா
Published on

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் ஒன்றியம் திருவரங்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி கருட வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 5.45 மணிக்கு உற்சவர் அரங்கநாதர் கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மாடவீதி வழியாக ஊர்வலமாக வந்து 8 மணிக்கு ஆஞ்சநேயர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அருள், எழுத்தர் லோகநாதன், பணியாளர் பிரகாஷ், விமல், வக்கீல் லட்சுமிகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை ரங்கநாத பட்டாச்சாரியார் தலைமையிலான குருக்கள் செய்திருந்தனர். கருட வாகனத்தில் சாமியை தூக்கிச்செல்வது தொடர்பாக உள்ளூரை சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகனாக கருட வாகனத்தை வெளியூரை சேர்ந்தவர்கள் தூக்கிச்சென்று வந்தனர்.. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று உள்ளூரை சேர்ந்தவர்கள் கருடவாகனத்தில் சாமியை தூக்கிச்சென்றனர். இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில், மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com