"சமூக முன்னேற்ற சங்கத்தை வலுப்படுத்துங்கள்"

சமூக முன்னேற்ற சங்கத்தை வலுப்படுத்துங்கள் என்று திண்டிவனத்தில் நடந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
"சமூக முன்னேற்ற சங்கத்தை வலுப்படுத்துங்கள்"
Published on

திண்டிவனம், 

திண்டிவனத்தில் சமூக முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் கோ.க.மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

கல்வியில் நம் சமூகம் மிக, மிக பின் தங்கி உள்ளது. பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள். அதிகமான பயிற்சி மையங்களை அமைத்து உங்கள் பிள்ளைகளுக்கும், உறவினர்கள் பிள்ளைகளுக்கும் படிக்க உதவி செய்ய வேண்டும். பண உதவி அல்ல. படிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் பயிற்சி கொடுக்க வேண்டும்.

நம்முடைய சமூக மக்கள் தொகையின்படி 15 சதவீதம் இடஒதுக்கீடு தர வேண்டும். அது கொடுத்தால்தான் நம்முடைய சமூகம் மேலும் முன்னேற முடியும். 7 நாட்கள் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தோம். மீண்டும் எங்களை அந்த நிலைக்கு தூண்டாதீர்கள்.

பலப்படுத்துங்கள்

நான் ஒரு சங்க தலைவராக இருந்தால் தூங்கவே மாட்டேன். தொடர்ந்து உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டே இருப்பேன். எனவே அதிக உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை பலப்படுத்த வேண்டும். சங்கம் தான் முதன் முதலில் வைக்கப்பட்டது. பின்னர் தான் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. சமூக முன்னேற்ற சங்கத்திற்கு பல தலைவர்கள் உழைத்து உள்ளனர். அந்த சங்கத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் 3 மாதத்திற்கு ஒரு முறை கூடி திட்டமிடுவோம். வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் சிவபிரகாசம், மாநில செயலாளர் ஏழுமலை, பொருளாளர் பாஸ்கரன், தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம் பரந்தாமன், செயலாளர் தாமோதரன், பொருளாளர் ஞானசுந்தரம், தமிழ்நாடு அரசு அலுவலர், பணியாளர்கள் உரிமை நலச்சங்க தலைவர் பொன்மலை, செயலாளர் சரவணபெருமாள், பொருளாளர் பெரியண்ணன், தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்க பொதுச்செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com