வலுவடையும் மிக்ஜம் புயல்- தயார்நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு

சூறாவளியால் ஏற்படும் கனமழையின் போது போதுமான எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வலுவடையும் மிக்ஜம் புயல்- தயார்நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜம் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் புயலால் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை சூறாவளிக்கான ஆயத்தக் கூட்டம் 01.12.2023 அன்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதுதொடர்பாக, பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது:-

சூறாவளியால் ஏற்படும் கனமழையின் போது போதுமான எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். மருத்துவக் குழு, மருத்துவ அலுவலர், பணியாளர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் வெள்ளப் பாதிப்பு அதிக பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளுடன் இருப்பதை உறுதிசெய்யவும். ஆஸ்பத்திரியில் அவசர மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் படுக்கைகள் கிடைப்பதையும் வழங்குவதையும் உறுதி செய்தல். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான எரிபொருளுடன் கூடிய பேக்கப் ஜெனரேட்டரை வைத்து 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்யவும்" என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் விடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com