கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை

கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
Published on

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு சார்பில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், ஊழியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், அரசின் சட்ட விதிகளுக்குட்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்க வேண்டும், கள்ளத்தனமாகவோ அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போலி மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார். கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தங்களது பகுதிகளில் யாரேனும் கள்ளச்சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து தகவலை மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com