

சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்து போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 20,334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதுவரை 5 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.