தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - மருத்துவ மாணவர் சேர்க்கை குழு எச்சரிக்கை

தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 2025-26-ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளன. வகுப்புகள் நேற்று முன்தினம் தொடங்கினாலும், கலந்தாய்வில் இடங்களை உறுதி செய்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

அவ்வாறு சேரக்கூடிய மாணவ-மாணவிகளிடம் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி டீன், முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

* அனைத்து தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களும் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றன.

* 2025-26-ம் கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு, கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத்தவிர அதிக கட்டணத்தைக் கோரினால், அரசாங்கத்தால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* மாணவ-மாணவிகளிடம் இருந்தோ, பெற்றோரிடம் இருந்தோ இதுதொடர்பாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால், அந்தந்த நிறுவனம் மீது உரிய அதிகாரிகள் மூலம் அங்கீகாரத்தை திரும்பப் பெறுதல் அல்லது கல்லூரியின் இணைப்பை ரத்துசெய்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com