“கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - டி.ஜி.பி. சைலேந்திர பாபு

கஞ்சா மற்றும் குட்கா போதைப்பொருட்கள் இருக்கக் கூடாது என்ற முனைப்புடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
“கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - டி.ஜி.பி. சைலேந்திர பாபு
Published on

ராமநாதபுரம்,

சரக அளவிலான காவல்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம், தமிழகம் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, தமிழகத்தில் சரக அளவிலான காவல்துறை அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக காஞ்சிபுரம் மற்றும் வேலூர் சரகங்களில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகா டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், கஞ்சா வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நேரடியாக ஆந்திராவுக்கே சென்று குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், கஞ்சா மற்றும் குட்கா போதைப்பொருட்கள் இருக்கக் கூடாது என்ற முனைப்புடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com