வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என வலியுறுத்தியுள்ளோம்.என தெரிவித்துளார்.
வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை
Published on

தமிழ்நாட்டில் கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்றுசெய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியதாவது ;

தென் மண்டலத்தில் 20 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என வலியுறுத்தியுள்ளோம்.விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"என தெரிவித்துளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com