வாக்கு எண்ணிக்கை அதிரடி கட்டுப்பாடுகள்: கோவை மாநகர காவல் துறை

வாக்கு எண்ணும் மையத்திற்குள் 17C படிவம், நோட்பேட் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கு மட்டுமே அனுமதி என கோவை மாநகர காவல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை அதிரடி கட்டுப்பாடுகள்: கோவை மாநகர காவல் துறை
Published on

கோவை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 கடந்த 23.04.2026 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையமான தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுமார் 4,000 காவல் துறையினர் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர், 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் துறை சார்பில் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

நாளை வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா மற்றும் பென்சில் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு. வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும்

வாக்கு எண்ணும் மையத்திற்கும 17C படிவம், நோட் பேட், எழுதும் நோட்டு புத்தகங்களுக்கு மட்டுமே அனுமதி. செல்போன், கால்குலேட்டர் , ப்ளூடூத் இயர் போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சிகரெட், மது, இ-சிகரெட்களுக்கு தடை

அனைவரும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என கோவை மாநகரக் காவல் துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com