20-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் - கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

மின்கட்டணத்தை குறைக்காவிட்டால், வரும் 20-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
20-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் - கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
Published on

திருப்பூர்,

கோவை ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினர், பல்லடத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது, மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 19-ஆம் தேதி சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்க இருப்பதாக கூறிய அவர்கள், தங்களுடைய கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவிட்டால், வரும் 20-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com