சேலத்தில், 3-வது நாளாககிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் இணையவழி சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிப்பு

சேலத்தில் 3-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இணையவழி சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.
சேலத்தில், 3-வது நாளாககிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் இணையவழி சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிப்பு
Published on

சூரமங்கலம்

சேலத்தில் 3-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இணையவழி சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

பணியிடை நீக்கம்

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் முருங்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்தது.

இதனால் விழா ஏற்பாடுகளை சரிவர கவனிக்கவில்லை எனக்கூறி கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

3-வது நாளாக போராட்டம்

கண்ணன் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஜாகீர்அம்மாபாளையம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாக அதிகாரிகளின் போராட்டத்தால் இணையவழியில் சான்றிதழ் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சான்றிதழ் கேட்டு இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் குறிப்பிட்ட காலத்தில் சான்றிதழ் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கண்ணன் மீதான பணி இடைநீக்கத்தை ரத்து செய்யாவிட்டால் இன்னமும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com