“நீதிக்கு இது ஒரு போராட்டம், இதை நிச்சயம் உலகம் பாராட்டும்” - பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து

பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
“நீதிக்கு இது ஒரு போராட்டம், இதை நிச்சயம் உலகம் பாராட்டும்” - பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில், பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அற்புதம்மாள், குயில்தாசன் மற்றும் அறிவின் குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல வருடங்களாக பேரறிவாளன் விடுதலைக்காக போராடிய அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிக்கு இது ஒரு போராட்டம், இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

இவ்வாறு நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com