மாணவி கடத்தல்

புதுப்பேட்டையில் மாணவி கடத்தல்
மாணவி கடத்தல்
Published on

புதுப்பேட்டை

புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி பிளஸ்-2 முடித்துவிட்டு, மேற்படிப்பு படிக்க திட்டமிட்டு இருந்தார். வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தாய், புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், மாணவியை எஸ்.ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்த அன்பரசன்(வயது 23) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டதாகவும், மாணவியை மீட்டுத்தருமாறும் கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com