மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

தட்டார்மடம் அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
Published on

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகில் அம்பலசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆழ்வார் திருநகரி வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு கல்வி அலுவலர் தலைவர் சாராள், பஞ்சாயத்து கவுன்சிலர் நயினார், சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜீவா வரவேற்றார். பள்ளியின் சிறப்பு குறித்து உதவி தலைமை ஆசிரியர் செலினா பிரின்ஸ் கூறினார்.

பேரணியில் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பிராங்ளின் பீட்டர், வட்டார ஒருங்கினைப்பாளர் புனிதராஜா, அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார கணக்காளர் முத்தையா, ஆசிரியர்கள் சரஸ்வதி, கிறிஸ்டி மலர், கமலேசன், அருணா, யமுனா, கிரேனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com