அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடக்கம்

ரிஷிவந்தியம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கியுள்ளது.
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடக்கம்
Published on

ரிஷிவந்தியம், 

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று இந்த கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயங்கும். மேலும் 9363462080, 8248497059 ஆகிய செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இது தவிர www.tngasa.in என்ற இணையதள முகவரி மூலமும் மாணவர்கள் விவரங்களை தெரிவித்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com