

காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே நாகரசம்பட்டி பூசாரி தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 51). விவசாயி. இவர் வெளியே சென்றிருந்தபோது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் வீட்டில் பூஜை அறையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை திருடினார். அப்போது வீட்டுக்கு வந்த பழனி அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் அவரை நாகரசம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் நாகரசம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுமன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.