விஷம் குடித்து மாணவர் தற்கொலை

விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து மாணவர் தற்கொலை
Published on

சமயபுரம், ஜூன்.21-

தா.பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் சந்தோஷ் (வயது 13). இவர் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கி அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், அவரை பள்ளியை விட்டு நீக்கியதாக தெரிகிறது. இதனால் சந்தோஷ் தா.பேட்டையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார். இதனையடுத்து, அவரது தந்தை சதீஷ்குமார் மீண்டும் பெருவளப்பூர் பள்ளியில் சேர்த்து விடுவதாக கூறி அவரை அங்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தோஷ் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டதாக தெரிகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com