கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கேசவநாராயணன். இவருடைய மகன் சரண் ஆதித்யா (16 வயது). இவர் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்து வந்தார்.

கல்லூரியில் கடந்த மாதம் 18-ந்தேதி அறிமுக வகுப்பு தொடங்கியது. 24-ந்தேதி கல்லூரி விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்ற, சரண் ஆதித்யா அதன் பின்னர் நேற்று முன்தினம் கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் விடுதியில் சரண் ஆதித்யா தங்கியிருந்த அறையில் நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சரண் ஆதித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரண் ஆதித்யா ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com