பெற்றோரை மிரட்ட தூக்குப்போட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு

பெற்றோரை மிரட்ட தூக்குப்போட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
பெற்றோரை மிரட்ட தூக்குப்போட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
Published on

 மேலூர், 

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பேங்க் ரோட்டில் வசிப்பவர் பாண்டி. இவர் சாலையோரம் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அண்ணாமலை (வயது 20). இவர் கிடாரிப்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தமக்கு விலை உயர்ந்த செல்போன் வாங்கித்தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பெற்றோர்களை மிரட்டுவதற்காக அண்ணாமலை வீட்டினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதுபோல நடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி மயங்கி விழுந்த அண்ணாமலை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவர் அண்ணாமலை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com