டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் சாவு

திருவெண்காடு அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் இறந்தார்.
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் சாவு
Published on

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரி வேதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகன் கவின் (வயது13). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கார்த்திக்கு சொந்தமான டிராக்டரில் சென்றபோது, அதிலிருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் விரைந்து சென்று பலியான கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிராக்டர் டிரைவர் கார்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com