மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

கந்தர்வகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் பலியானார்.
மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி
Published on

மின்சாரம் பாய்ந்தது

தஞ்சாவூர் மாவட்டம் சித்துரகுடி கிராமத்தை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 45), விவசாயி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக கந்தர்வகோட்டை அருக உள்ள குளத்தூர் நாயக்கர் பட்டியில் உள்ள மாமனார் கோவிந்தசாமி (65) வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மூத்த மகன் முகேஷ் (15) அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், இளைய மகன் மகேஷ் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில், மகேஷ் தனது தாத்தா கோவிந்தசாமி குடிசை வீட்டில் பல்பு எரியாததால் புதிய பல்பு வாங்கி மாட்டிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மகேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com