தறி எந்திரத்தில் சிக்கி மாணவர் சாவு

தறி எந்திரத்தில் சிக்கி விபத்துக்குள்ளான மாணவர் இறந்தார்.
தறி எந்திரத்தில் சிக்கி மாணவர் சாவு
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே வேம்படிதாளம் பகுதி அரியம்பாளையத்தை அடுத்த நரிகுட்டை ரோட்டை சேர்ந்த செந்தில்குமார் மகன் கவுரி (வயது 16). இந்த மாணவன், காக்காபாளையத்தில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்ததாக தெரிகிறது. தறி தொழிலாளியான செந்தில்குமாருக்கு, உதவியாக கவுரி நேற்று தறிபட்டறையில் இருந்ததாக தெரிகிறது.

அப்போது தறி எந்திரத்தில் சிக்கி கவுரி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com